செவ்வாய் புதன் சேர்க்கையால் செழிக்கப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Mars Mercury Conjunction: இந்த இரு கிரகங்களும் மகரத்தில் இணைவதன் காரணமாக அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்கள் ஏற்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2024, 01:10 PM IST
  • செவ்வாய் புதனின் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • மகர ராசியில்தான் இந்த சேர்க்கை ஏற்படுகின்றது.
  • ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
செவ்வாய் புதன் சேர்க்கையால் செழிக்கப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Mars Mercury Conjunction: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ராசிகளையும் இயக்கங்களையும் மாற்றுகின்றன. இப்படிப்பட்ட மாற்றங்கள் பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பெயர்ச்சிகளின் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட சேர்க்கைகளால் பல ராஜயோகங்களும் உருவாகின்றன. 

Add Zee News as a Preferred Source

இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளில் மட்டுமல்லாமல், நாட்டு மற்றும் உலக நடப்புகளிலும் இருக்கும். ஜோதிட கணக்கீடுகளின் படி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை மகர ராசியில் புதன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை உருவாகிறது. இந்த இரு கிரகங்களும் மகரத்தில் இணைவதன் காரணமாக அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்கள் ஏற்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

செவ்வாய் புதன் சேர்க்கையால் செழிக்கப்போகும் ராசிகள் இவைதான்

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் புதனின் சேர்க்கையால் நல்ல நாட்கள் தொடங்க உள்ளன. இந்த சேர்க்கை அவர்களின் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல ஏற்றத்தை அளிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஏதேனும் வியாபாரம் செய்தாலோ அல்லது தொடங்கினாலோ, அது அதிக லாபத்தை அளிக்கும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். 

மேலும் படிக்க | இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், முழு ராசிபலன் இதோ

தனுசு (Sagittarius)

புதன் செவ்வாய் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அள்ளித் தரும். பண வரவு அதிகமாகும். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் காணலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். பிறருக்கு உதவுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். ஆன்மீக பணிகளில் நாட்டம் காட்டுவீர்கள். பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மனதில் எந்த நேர்மறையான ஆசை இருந்தாலும் அது நிச்சயம் நிறைவேறும். உங்கள் வாழ்க்கை துணையுடன் உறவு நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மகரம் (Capricorn)

செவ்வாய் புதனின் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மகர ராசியில்தான் இந்த சேர்க்கை ஏற்படுகின்றது. ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்த காலத்தில் இவர்களது நம்பிக்கை அதிகரிக்கும். இது லாபகரமான நேரம். இப்போது முதலீடுகளை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். முடிந்தால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பை அதிகரிப்பது நல்லது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வரும் வாரத்தில் பணியிடத்தில் நிம்மதியாக இருக்கப்போகும் ராசிக்காரர் நீங்களா? வார ராசிபலன்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News