அடுத்த மாதம் அட்டகாசம்: செப்டம்பர் கிரக மாற்றங்கலால் இந்த ராசிகள் மீது பண மழை

Lucky Zodiac Signs of September 2023: கிரக மாற்றங்களால் இந்த மாதம் சில ராசிகளுக்கு மிக அனுகூலமாக இருக்கும். இவர்களுக்கு அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2023, 03:14 PM IST
  • செப்டம்பர் மாதம் துலாம் ராசியினருக்கு அபரிமிதமான செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
  • அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும்.
அடுத்த மாதம் அட்டகாசம்: செப்டம்பர் கிரக மாற்றங்கலால் இந்த ராசிகள் மீது பண மழை title=

செப்டம்பர் 2023 இல் கிரக பெயர்ச்சிகள், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. சில கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன, மேலும் கிரகங்களின் இயக்கங்களும் மாறுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்கள், இயக்க மாற்றங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

இந்த வகையில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. செப்டம்பரில் பல கிரகங்கள் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளன. இதனுடன் முக்கியமான கிரகப் பரிமாற்றங்களும் இந்த மாதம் நடக்கவுள்ளன. இந்த அனைத்து கிரக மாற்றங்களும் இயக்க மாற்றங்களும் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவை மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செப்டம்பர் 2023 அனைத்து 12 ராசிகளுக்கும் சிறப்பானதாக இருக்கும். எனினும், இந்த மாதம் நடக்கவுள்ள கிரக மாற்றங்களால் இந்த மாதம் சில ராசிகளுக்கு மிக அனுகூலமாக இருக்கும். இவர்களுக்கு அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

செப்டம்பர் மாதத்தின் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் 

செப்டம்பர் மாதத்தில் சனி, சூரியன், குரு, சுக்கிரன் போன்ற அனைத்து கிரகங்களின் நிலைகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது. செப்டம்பரில் சுமார் அரை டஜன் கிரகங்கள் வக்ர இயக்கத்தில் இருக்கப்போகின்றன. இப்படிப்பட்ட ஒரு அமைப்பு பல ஆண்டுகள் கழித்து உருவாகவுள்ளது. 

செப்டம்பர் தொடக்கத்தில் சுக்கிரன் கிரகம் வக்ரமாக இருப்பார். இது தவிர சனி பகவான், புதன், குரு மற்றும் ராகு-கேதுவும் வக்ர நிலையில் இருப்பார்கள். செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவார். அதன் பின்னர் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் புதன் வக்ர நிவர்த்தி அடைவார். இதற்கு ஒரு நாள் கழித்து, செப்டம்பர் 17 ஆம் தேதி, சூரியன் தனது ராசியை மாற்றி கன்னியில் பெயர்ச்சியாவார். பின்னர் 24 செப்டம்பர் 2023 அன்று செவ்வாய் கன்னி ராசியில் அஸ்தமனமாவார். இந்த மாற்றங்கள் அனைத்தும் 4 ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். இவர்களது வாழ்வில் பொற்காலம் துவங்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி: 

மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பல கிரகங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். இவர்களது மதிப்பு, மரியாதை, பதவி, கவுரவம் அனைத்தும் உயரும். யாரிடமும் அதிக வாக்குவாதம் செய்யாமல் இருந்தால், இந்த நேரம் அதிக நன்மைகளைப் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமான வேலைகளில் செலவிட முடியும். வியாபாரம் நன்றாக நடக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். தடைபட்ட வேலைகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். 

மேலும் படிக்க | பூரட்டாதி நட்சத்திரத்தில் சூரியனின் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

துலா ராசி: 

செப்டம்பர் மாதம் துலாம் ராசியினருக்கு அபரிமிதமான செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். இந்த நேரம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். வருமானம் அதிகரிப்பதால், நிதி நிலை சிறப்பாக இருக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.

சிம்ம ராசி: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பல நன்மைகள் கிடைக்கும். இந்த காலத்தில் பதவி உயர்வு பெறலாம். வியாபாரம் நன்றாக நடக்கும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரை இந்த காலத்தில் பெறக்கூடும். இது உங்களுக்கு பெரும் லாபத்தை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டு. இந்த பயணங்களால் அனுகூலமான விளைவுகள் கிடைக்கும்.

மகர ராசி: 

செப்டம்பர் மாத கிரகப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். திடீரென்று பண வரவு இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இந்த நேரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக நன்மைகளும் முன்னேற்றமும் கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகி வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திரும்ப வந்துட்டேனு சொல்லு..! வலுப்பெறும் சனியால் கோலோச்சப்போகும் 4 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News