சனி பெயர்ச்சி 2025... கவலையை விடுங்க... ‘இந்த’ ராசிகளின் பொன்னான காலம் ஆரம்பம்..!!

சனி பெயர்ச்சி 2025: தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனி, மார்ச் 29, 2025 இரவு 11:01 மணிக்கு கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 16, 2024, 06:34 PM IST
  • தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனி மார்ச் 2025 வரை இந்த ராசியில் நீடிப்பார்.
  • பல ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறுவார்கள்.
  • குரு பகவானின் ராசிக்குள் சனி நுழைவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடும்.
சனி பெயர்ச்சி 2025...  கவலையை விடுங்க... ‘இந்த’ ராசிகளின் பொன்னான காலம் ஆரம்பம்..!! title=

சனி பெயர்ச்சி 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்குபவரும் நீதிக் கடவுளுமான சனி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறார். நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாக சனி கருதப்படுகிறது. எனவே, சனியின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. சில ராசிக்காரர்களின் வாழ்வில் கொந்தளிப்பை உண்டாக்கும் அதே வேளையில், பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும். 

ஜோதிடத்தின்படி,  தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனி மார்ச் 2025 வரை இந்த ராசியில் நீடிப்பார். பின்னர் மார்ச் 29, 2025 இரவு 11:01 மணிக்கு சனி தனது ராசியை மாற்றி கும்பம் ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார். சுமார் இரண்டரை வருடங்கள் இந்த ராசியில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், பல ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறுவார்கள். குரு பகவானின் ராசிக்குள் சனி நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மீன ராசியில் பிரவேசிக்கும் சனி பகவான் 2027ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். இதனால், சில ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான காலம் தொடங்கும். மீன ராசிக்காரர்களுக்கு தலைமை தாங்கும் திறன் உண்டு. இதனால் அவர்கள் பல பெரிய பொறுப்புகளை பெறலாம். இதனுடன், சில ராசிக்காரர்கள் நகைகள், சொத்து போன்றவற்றை வாங்குவதன் மூலமோ அல்லது பூர்வீகச் சொத்தின் மூலமாகவோ பலன் பெறலாம்.

சிம்மம் 

சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கடந்த பல ஆண்டுகளாக உங்களுக்கு வாழ்க்கை கடினமாக உள்ளது. ஆனால் இவை சனி மீனத்தில் நுழையும் போதே படிப்படியாக முடிவுக்கு வரும். அத்தகைய சூழ்நிலையில், வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கை எழும். வாழ்க்கையில் பல வெற்றிகளை சந்திக்க நேரிடும். இதனுடன், தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களுக்கு அதிகரிக்கும். இதன் மூலம் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அதை நீங்கள் விடாமுயற்சியுடன் நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் இது உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய படியாக இருக்கும். 

துலாம்

சனி பெயர்ச்சியினால் துலாம் ராசிக்காரர்கள் அதிக லாபம் சம்பாதிக்கலாம். வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் திருப்தி அடையலாம். நீண்டகால பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரலாம். உங்களின் கடின உழைப்பும் போராட்டமும் மார்ச் 2025க்குப் பிறகு நல்ல பலனைக் கொடுக்கத் தொடங்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், இதன் மூலம் நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம். புத்திசாலித்தனம், அறிவாற்றல் மற்றும் பேச்சுத்திறன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். இதனுடன், புதிய வேலை தேடுபவர்களும் நன்மைகளைப் பெறுவார்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களும் நிறைய நன்மைகளைப் பெறலாம். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். 

மீனம்

சனி மீன ராசியில்சஞ்சரிக்கும் நிலையில், மீன ராசிக்காரர்கள் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீங்கள் வாழ்க்கையில் நிறைய பொருள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு செயலிலும் வெற்றியை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களும் வெற்றி பெறுவார்கள். வியாபாரத்திலும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். புதிதாக தொழில், வியாபாரம் தொடங்க நினைத்தால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News