செப்டம்பரில் 3 பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள், மகிழ்ச்சி, செழிப்பு, பண மழை இந்த ராசிகளுக்கு

September 2024 Grah Gochar positive effects: செப்டம்பரில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி நடக்க உள்ளது. 3 பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தால் 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 9, 2024, 10:28 PM IST
  • செப்டம்பரில் உங்கள் கவலைகள் நீங்கி மனதளவில் நன்றாக இருப்பீர்கள்.
  • இந்த மாதம் கடன் கொடுப்பதாய் தவிர்க்க வேண்டும்.
  • இந்த மாதம் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
செப்டம்பரில் 3 பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள், மகிழ்ச்சி, செழிப்பு, பண மழை இந்த ராசிகளுக்கு title=

September 2024 Planet Transit positive effects: செப்டம்பர் 2024 தொடங்கி 9 நாட்கள் முடிந்துள்ளது. சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய 3 பெரிய கிரகங்களின் பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாதத்தில் புதன் தனது ராசியை இரண்டு முறை மாற்றுவார். அதன்படி முதல் மாற்றம் செப்டம்பர் 4 ஆம் தேதி சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி அடைந்தார். அதன் பிறகு தற்போது வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அடுத்ததாக கிரகங்களின் ராஜாவான சூரியன் செப்டம்பர் 16 ம் தேதி கன்னி ராசியிலும், சுக்கிரன் செப்டம்பர் 18 ஆம் தேதி துலாம் ராசியிலும் பெயர்ச்சி அடையப் போகிறார். செப்டம்பர் மாதம் இந்த 3 பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளில் 4 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இனிமையான மாற்றங்களைக் காணலாம்.

கிரகப் பெயர்ச்சி செப்டம்பர் 2024: இந்த 4 ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் தொடங்கும்:

மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றம் சுப பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மேலதிகாரி உங்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பார். இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | இன்னும் 9 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

உங்கள் ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களை பெறலாம். நிதி நிலையில் சாதகமாக இருக்கும். இதன் காரணமாக உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் வெற்றி பெறலாம். இந்த மாதம் நீங்கள் நல்ல பண ஆதாயங்களைப் பெறலாம்.

மிதுனம் (Gemini Zodiac Sign): செப்டம்பரில் மூன்று பெரிய கிரகங்களின் ராசிகளில் ஏற்படும் மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இந்த மாதம் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். இருப்பினும், சிறு சிறு மன அழுத்தத்தைப் போக்க யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

இந்த மாதத்தில் உங்களின் பெரிய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை மற்றும் வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெற வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்கள் புதிய முறையில் முதலீடுகளைப் பெறலாம். இந்த மாதம் பணத்தட்டுப்பாடு நீங்கும்.

கன்னி (Virgo Zodiac Sign): இந்த மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்பை தரப்போகிறது. இந்த மாதம் புதிய வீடு, வாகனம் வாங்கலாம். நல்ல பண வரவு ஏற்படும். நிதி நிலை மேம்படும்.

நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதத்தில் உங்கள் மனம் வழிபாட்டில் கவனம் செலுத்தும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும்.

மகரம் (Capricorn Zodiac Sign): செப்டம்பரில் மூன்று பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு சுபமாக அமையும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம், இதன் காரணமாக உங்களுக்கு சேமிப்பு மற்றும் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். இந்த மாதம் கடன் கொடுப்பதாய் தவிர்க்க வேண்டும்.

இந்த மாதம் உங்கள் பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையால சாதகமான பலந கிடைக்கும். செப்டம்பரில் உங்கள் கவலைகள் நீங்கி மனதளவில் நன்றாக இருப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி.. அரச வாழ்க்கை, அதிர்ஷ்டம் பொற்கால மழை இந்த ராசிகளுக்கு மட்டுமே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News