மருத்துவ செலவை தவிர்க்க கவனம்! சுக்கிரப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ’3’ ராசிகள்

Venus Transit: சுக்கிரனின் சஞ்சாரத்தால் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று ராசிகள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2022, 11:33 AM IST
  • சுக்கிரனின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகும்
  • திடீர் உடல்நலக்குறைவு ஏற்படலாம்
  • சுக்கிரன் மன கிலேசத்தை ஏற்படுத்துவார்
மருத்துவ செலவை தவிர்க்க கவனம்! சுக்கிரப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ’3’ ராசிகள் title=

கிரகங்களின் பெயர்ச்சிகள் ராசி மாற்றங்கள் அனைவரின் வாழ்விலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவையாக இருப்பதால், இவை மிகவும் முக்கியமானவை. கிரக மாற்றங்களால் மனித வாழ்க்கையில் சுப பலன்களையும், சில சமயங்களில் அசுப பலன்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கையில் சுகம், ஆடம்பரம் உட்பட மகிழ்ச்சிக்கும் உல்லாச வாழ்க்கைக்கும் காரணகர்த்தா என்று அழைக்கப்படுபவர் சுக்கிரன். களத்திர காரகன் என்றும் அழைக்கப்படும் சுக்கிரனின் பெயர்ச்சி இந்த மாதம் 18ம் தேதி, அதாவது இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.  

இன்னும் சில நாட்களில் நடைபெறும் சுக்ரனின் ராசி மாற்றம் காரணமாக, சிலருக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அக்டோபர் 18-ம் தேதி இரவு 9.22 மணிக்கு துலாம் ராசியில் பிரவேசிக்கப் போகும் சுக்கிரனால், மூன்று ராசிகள் உடல்நிலை பாதிக்கப்படலாம். எனவே அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால், ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் ராசிகள் என்று கூறப்படும் ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் கிரக நிலையைப் பொறுத்து, இந்த பாதிப்புகள் மாறும் என்பது கவனிக்கத்தக்கது.

சுக்கிரனின் சஞ்சாரத்தால் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று ராசிகள் இவை...

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சியால் துக்கத்தால் துன்பப்படவிருக்கும் ராசி! கடக ராசியினருக்கு எச்சரிக்கை

மேஷம்
மேஷ ராசிக்கு பணம், கண், வாய், பேச்சு, குடும்பம் ஆகிய இரண்டாமிடத்தையும், திருமணம், மனைவி, துணை என்ற ஏழாவது வீட்டையும் சுக்கிரன் ஆட்சி செய்கிறார். அக்டோபர் 18 அன்று, அவர் தனது சொந்த ராசியில் சஞ்சரிக்கும் போது உங்கள் ஏழாவது வீட்டில் இருக்கிறார். துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் இத்தகைய அமைப்பில் மாறுபட்ட பலன்களை தரும்.

முன்னேற்றமும், பண வரத்தும் இருந்தாலும், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சிறுநீரகங்கள் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் ஏற்படலாம்.

மேலும் படிக்க | ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ரிஷபம் லக்னம் மற்றும் ஆறாவது வீட்டிற்கு அதிபதி சுக்கிரன். பிறப்பு, இயல்பு மற்றும் ஆளுமை ஆகியவற்றை சித்தரிக்கும் ஆறாவது வீடு ஒருவரின் நோய்கள், எதிரிகள் மற்றும் கடன்கள் தொடர்பான விஷயங்களுக்கு உரியது. துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் இதுபோன்ற சூழ்நிலையில் கலவையான பலன்களைத் தரும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோய் வீட்டில் சுக்கிரன் இருப்பது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே ஏதாவது நோய் பாதிப்பு இருந்தால், அது மீண்டும் தொந்தரவு செய்யலாம். திடீரென உடல்நலக் குறைவு ஏர்படலாம். எனவே உணவு மற்றும் சுகாதாரத்தில் அதிக கவனம் தேவை.

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

துலாம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், உங்கள் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாகவும் இருக்கிறார், இது வயது முதிர்வு, ஆபத்து மற்றும் விபத்து போன்ற விஷயங்களை நிர்வகிக்கிறது. துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் இப்போது உங்கள் சொந்த ராசியில், உங்கள் முதல் வீட்டில் நிகழும். இது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உணவை ரசித்து ருசித்து சாப்பிட விருப்பம் கொண்டவர்களாக இருந்தாலும், உணவுகளால் நோய்வாய்ப்படும் வாய்ப்பு உள்ளதால், கவனமாக இருக்கவும். எதிரிகள் ஆபத்தை உருவாக்கலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News