திருமணம் கைகூடவில்லையா? நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இதுதான்!

பலருக்கு எத்தனை முறை வரன் கைகூடி வந்தாலும் திருமணம் கைகூடாமலேயே இருக்கும். இவர்களுக்கான பரிகாரங்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Nov 13, 2023, 06:53 PM IST
  • பலருக்கு பல காரணங்களால் திருமணத்தில் தடைகள் ஏற்படலாம்.
  • இதற்கான பரிகாரங்கள்..
  • சில கோயில் ஸ்தலங்களுக்கு சென்று வந்தாலும் திருமண தடைகள் விலகும்.
திருமணம் கைகூடவில்லையா? நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இதுதான்! title=

“திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்” என்று முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். ஒரு சிலருக்கு திருமணம் என்பது எதிர்பாராத விதமாக கைகூடிவிடும். ஆனால், அதற்கு அப்படியே நேர்மாறாக சிலருக்கு சில விஷயங்கள் நடக்கும். திருமணம் கைகூடாமல் போவதற்கு ஜாதக தோஷங்கள் அல்லது கிரகபலன்கள் காரணமாக இருக்கலாம். இவற்றை களைவது எப்படி? விரைவில் திருமணம் கைகூட செய்வது எப்படி? 

திருமணம் தள்ளிப்போவதற்கான காரணங்கள்..

இருக்கும் 12 ராசிகளும் அதன் கட்டங்கலும்தான் நம்மை ஆள்கின்றன. நவகிரகங்கள் எனப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது உள்ளிட்டவை ஒருவரது ஜாதகத்தில் அமரும் போது திருமண யோகம் கைகூடும் என கூறப்படுகிறது. சில தோஷங்களால் இவை அமர்வதற்கு கால தாமதங்கள் ஆகலாம். இவற்றிற்கான பரிகாரங்களும் இருக்கின்றன. 

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் நவம்பர் 1, 2023: இன்று இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை

திருமண தடை விலக செல்ல வேண்டிய கோயில்..

திருமண தடை விலகுவதற்கு சில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வந்தால் கண்டிப்பாக மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படி, பலருக்கும் சுப காரியங்கள் நடக்க உதவும் கோயில்களுள் ஒன்று, புதுக்கோட்டையில் உள்ளது. 

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் தொன்மையான கோயில் ஸ்தலங்களுள் ஒன்று, வரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயிலின் வரலாறு 100 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள மூலவர், சீனிவாச பெருமாள். உற்சவராக வரதராஜ பெருமாள் உள்ளார். இக்கோயிலின் கருவறையின் மேலே மீன் சின்னம் அமைந்துள்ளது. ஆகையால், இக்கோயில் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி இக்கோயிலில் உள்ள சிலைகள் சோழ மன்னர்களாள் உருவாக்கப்பட்டுள்ளவை என்றும் சில தொல்லியல் ஆராய்ச்சிகளின் மூலம் சான்றுகள் கிடைத்துள்ளன.

திருமண தடை விலக..

திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் வரதராஜ பெருமாளுக்கு பட்டு சாத்தி வழிபாடு செய்தால் அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும் மற்றும் நினைத்தது நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

திருமண தடையை ஏற்படுத்தும் ஜாதக தோஷங்கள்..

திருமண தடை ஏற்பட, பல சமயங்களில் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் காரணமாக இருக்கலாம். முந்தய ஜென்மத்தில் நாம் செய்த காரியங்களின் பலனாகத்தான் இந்த பிறவியில் நமக்கு ஜாதக பலன்கள் அமையும் என கூறப்படுகிறது. அதன்படி, நவகிரகங்களில் ஒரு கிரகமான செவ்வாய் தோஷம் மற்றும் ராகு கேது தோஷம் ஆகியவை கடுமையான தோஷங்களாக கருதப்படுகின்றன. இந்த தோஷங்கள்தான் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு தடையாக இருப்பதாக நம்பப்படுகிறது. சிலருக்கு சூரிய தோஷத்தால் திருமண தடை ஏற்படலாம். இதை நிவர்த்தி செய்ய அனுமன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். 

பரிகாரம்..

திருமணம் தடைப்பட்டு போக எப்படி சில தோஷங்கள் காரணமாக இருக்கிறதோ அதே போல அந்த தோஷக்களை நிவர்த்தி செய்யவும் சில பரிகாரங்கள் உள்ளன. அப்படிப்பட்ட பரிகாரங்களுள் ஒன்று, வாழைப்பூ பரிகாரம். இதை, ஒரு மண்டலம் (48 நாட்கள்) செய்ய வேண்டும். 

வாழைப்பூ பரிகாரம் செய்ய, முதலில் ஒரு முழு வாழைப்பூவை வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள பூக்களிஅ தனியாக உதிர்த்து அதை மாலையாக கோர்க்க வேண்டும். இந்த மாலையை வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று சாற்ற வேண்டும். திருமண வரம் வேண்டி இப்படி 48 நாட்கள் மனமுருகி வேண்ட வேண்டும். இப்படி தவறாமல் செய்தால் திருமண தடை நீங்கி மங்கள காரியம்  நிகழ்வது நிச்சயம். 

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.. முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News