இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்; 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணியால், 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 4 விக்கெடுகை மட்டுமே இழந்து 284 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் வரும் 25-ஆம் தேதி புனேவில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!