இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் தனது 300-வது விக்கெட்டினை நாக்பூர் போட்டியினில் வீழ்த்தினார். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஷ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வேக பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி இந்த சாதனையைப் படைத்தார். ஆனால் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளில் படைத்த சாதனையினை அஷ்வின் 54 போட்டிகளில் முறியடித்துள்ளார்.
நவம்பர் 2011-ல் இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற அஷ்வின், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பிரதான பந்துவீச்சாளராக இடம்பெற்று வருகின்றார்.
Congratulations to @ashwinravi99 on reaching 300 Test wickets, the fastest player to reach the milestone, taking just 54 matches! #INDvSL pic.twitter.com/IW7lzG4ZMd
— ICC (@ICC) November 27, 2017
வெறும் பந்துவீச்சாளராக மட்டும் அல்லாமல், சிறந்த மட்டையாளராகவும் இருக்கும் அஷ்வின் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஷ்வினின் சாதனைப் பட்டியளில் இன்று மேலும் ஒரு சாதனையாக, அவரது 300-வது விக்கெட் புதிதாக இடம் பெற்றுள்ளது!.