T20 World Cup-2022: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தழுவி அதிர்ச்சியை அளித்த இந்திய அணி, அடுத்ததாக 20 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கிறது.இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றி சுமார் 15 ஆண்டுகால கனவை மீண்டும் நிறைவேற்ற ஆயத்தமாக இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தன்னுயை தலைமையில் 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என ஆர்வமாக இருக்கிறார். இதற்காக அவரது தலைமையில் களமிறங்கும் இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில் பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக உருவானது.
பந்த் மற்றும் கார்த்திக்கு வாய்ப்பு
டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசும்போது, சஞ்சு சாம்சனின் பெயர் 20 ஓவர் உலகக் கோப்பைக்கான அணி தேர்வு கூட்டத்தில் விவாதிக்கப்படவே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை வென்று என்ன யூஸ்? உலக கோப்பைக்கு தகுதி பெறாத இலங்கை!
பிசிசிஐ முடிவு என்ன?
பிசிசிஐ அதிகாரி பேசும்போது, " ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வுக்குழு கூட்டத்தில் சஞ்சு சாம்சனின் பெயர் விவாதிக்கப்படவே இல்லை. அவருக்கு ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த தொடருக்குப் பிறகு நிலையான அணியை உருவாக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டிருந்தோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவார். மேலும், ரிஷப் பன்ட் இடம் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் இருக்கும் ஒரே இடது கை பேட்ஸ்மேன் அவர் மட்டுமே. ரிஷப் சிறப்பாக ஆடினால் இந்திய அணி வெற்றி பெறும்.
இந்திய அணியின் அடுத்த போட்டி
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டம்பர் 20 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான விளையாட இருக்கிறது.
மேலும் படிக்க | ரிஷப் பன்ட் முன்னாள் காதலிக்கு ரூட் போட்ட பாகிஸ்தான் இளம் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ