Chennai Super Kings Highlights: இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல் (Delhi Capitals) அணி ரன் எதுவும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தாலும், பின்னர் ஷிகர் தவானின் (Shikhar Dhawan) அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவர் 101(58) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் கடைசி வரையும் களத்தில் இருந்தார். டெல்லி அணி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்தது.
இந்த வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளி அட்டவணையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 6வது இடத்தில் உள்ளது.
இனி அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
D̶C̶ ̶i̶s̶ ̶y̶e̶t̶ ̶t̶o̶ ̶c̶h̶a̶s̶e̶ ̶a̶ ̶t̶o̶t̶a̶l̶ ̶s̶u̶c̶c̶e̶s̶s̶f̶u̶l̶l̶y̶ ̶t̶h̶i̶s̶ ̶I̶P̶L̶ ̶2̶0̶2̶0̶#DCvCSK #Dream11IPL #YehHaiNayiDilli pic.twitter.com/ATcC2uKfeC
— Delhi Capitals (Tweeting from) (@DelhiCapitals) October 17, 2020
நாளைக்கு இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) இடையே 35 வது போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்கும்.
ALSO READ | IPL 2020: வேறு அணியில் இருந்து வீரர்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு
இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) இடையே 36 வது போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR