ஒரு வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுப்பது இதுவே முதல்முறை

பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியை (PAK Captain Azhar Ali ) வீழ்த்தியபோது இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ( First Fast Bowler) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 25, 2020, 11:19 PM IST
  • 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
  • முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் மற்றும் அனில் கும்ப்ளே வரிசையில் இணைந்த ஆண்டர்சன்.
  • 2003 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆண்டர்சன்,
ஒரு வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுப்பது இதுவே முதல்முறை title=

Cricket News: இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சவுத்தாம்ப்டனின் தி ஏகாஸ் பவுலில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்டின் ஐந்தாவது நாளில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியை (PAK Captain Azhar Ali ) வீழ்த்தியபோது இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ( First Fast Bowler) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். 

பாகிஸ்தானின் (Pakistan vs Engalnd) முதல் இன்னிங்சில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், மேலும் அவர் இரண்டாவது இன்னிங்சில் அபிட் அலி மற்றும் அசார் ஆகியோரை அவுட் செய்தார். 

ALSO READ |  சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையின் 5 அட்டகாசமான இன்னிங்ஸ் இவை

முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் மற்றும் அனில் கும்ப்ளே (Anil Kumble) ஆகியோர் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளானர். தற்போது ஆண்டர்சன் 600 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த நான்காவது வீரராக மாறினார்.

2003 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆண்டர்சன், 2018 ஆம் ஆண்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 

Trending News