IND vs SL : இந்த ஆண்டின் முதல் T20 போட்டி; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்!!

இந்தியா மற்றும் இலங்கை ஒருவருக்கொருவர் 16 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய 11 போட்டிகளில் வென்றுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 4, 2020, 04:52 PM IST
IND vs SL : இந்த ஆண்டின் முதல் T20 போட்டி; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்!! title=

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளது. முதல் போட்டி அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள பார்சபரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி (Team Inida) பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், பார்சபராவின் சாதனை இந்தியாவுக்கு சாதகமாக இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அணி தனது முதல் டி 20 சர்வதேச போட்டியை இந்த மைதானத்தில் விளையாடியது.

10 அக்டோபர் 2017 அன்று, பார்சபரா ஸ்டேடியத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. அப்பொழுது அணியில் இருந்த பல வீரர்கள், இந்த முறை இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார்கள். ஆனால் அணியின் கேப்டன் இந்த முறை விராட் கோலி தான். அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி  20 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 119 என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 16 ஓவரிலேயே வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இதே மைதானத்தில் இலங்கை அணியை சந்திக்க இந்திய அணி தயாராக உள்ளது. 

இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான எட்டு டி 20 சர்வதேச போட்டிகளில் 6 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. இதில், இலங்கை 2016 ல் கடைசியாக வென்றது. அதன் பின்னர் இலங்கை அணியால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியவில்லை. அதாவது கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய மண்ணில் இலங்கையால் வெற்றி பெற முடியவில்லை.

இதுவரை இரு அணிகளும் ஒருவருக்கொருவர் 16 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய 11 போட்டிகளில் வென்றுள்ளது.

இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அதேநேரம் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவான், ராகுல், மனிஷ் பாண்டே, ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாட உள்ளனர். 

ஜனவரி 5 துவங்கி ஜனவரி 10 ஆம் நாள் வரை, மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்தியா டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷவர்த் சடே , ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News