இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள இந்தத் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் முகாமிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி நீண்ட வருடங்கள் சதம் அடிக்காமல் இருக்கும் கோலி இந்த தொடரில் சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்திய அணியானது தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. நாளை மறுநாள் (28ஆம் தேதி) நடக்கவிருக்கும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி காயத்தால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அணியிலிருந்து அவர் விலகினாலும் அஃப்ரிடியின் அனுபவம் இதர பந்துவீச்சாளர்களுக்கு பயன்படும் என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்து கேப்டன் பாபர் அசாம் தங்கள் அணியுடன் அவரை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்தச் சூழலில், நேற்று தங்களது பயிற்சியை தொடங்குவதற்காக மைதானத்துக்கு சென்ற இந்திய வீரர்கள் காயத்தால் அமர்ந்திருந்த சாஹின் அஃப்ரிடியை பார்த்து நலம் விசாரித்தார்கள்.
இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் சஹால் ஒருசில நிமிடங்கள் அஃப்ரிடியுடன் பேசி அவரது காயத்தின் தன்மை குறித்து கேட்டறிந்தார். அதேபோல் அவருக்கு அடுத்ததாக விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் அஃப்ரிடியிடம் நலம் விசாரித்தனர். அதேபோல், இந்திய அணியின் நிர்வாகத்தை சேர்ந்தவரும் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தில் இருப்பவரும், அந்த அணியின் முன்னாள் வீரருமான யூசுப் யுஹானாவுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்.
Stars align ahead of the #AsiaCup2022
A high-profile meet and greet on the sidelines pic.twitter.com/c5vsNCi6xw
— Pakistan Cricket (@TheRealPCB) August 25, 2022
இது தொடர்பான வீடியோக்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், இரண்டு நாடுகளுக்குமான பகை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான். விளையாட்டு வீரர்களுக்கு இல்லை என்பதை இந்த வீடியோ ஆணித்தரமாக உணர்த்துவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் படிக்க | Asia Cup 2022: ஆவேஷ் கானுக்கு ஆப்பு வைக்கப்போகும் ரோகித் சர்மா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ