தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
கடந்த பிப்., 1 ஆம் நாள் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
பின்னர் பிப்., 4 ஆம் தேதி நடைப்பெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிப்., 4 ஆம் தேதி நடைப்பெற்ற 3_வது போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
பிப்., 10 ஆம் தேதி நடைப்பெற்ற 4_வது போட்டியில் டக்வெல்த் முறையில் தென்னாப்பிரிக்கா வெற்றிப்பெற்றது.
பிப்., 13 ஆம் தேதி நடைப்பெற்ற 5_வது போட்டியில் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று,
6 ஒருநாள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த தொடரை வென்றதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சரித்திரம் படைத்தது கோலி தலைமையிலான இந்திய அணி.
தோற்றாலும் இந்திய கிரிக்கெட் அணி நம்பர் 1 தான்- படிக்க!!
இந்த சாதனை மூலம், இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 121 புள்ளிகளில் இருந்து 118 புள்ளிகளுக்கு சரிந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இன்று செஞ்சூரியனில் நடைபெறும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 6_வது போட்டியில், ஒருவேளை இந்தியா தோற்றாலும், முதலிடத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிக்கு ஒரு புள்ளி கூடும், தோற்கும் அணிக்கு ஒரு புள்ளி குறையும்.
6-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
அணி வீரர்கள்:-
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, தினேஷ் கார்த்திக் அல்லது மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா அல்லது ஷர்துல் தாகூர்.
தென் ஆப்பிரிக்கா: மார்க்ராம் (கேப்டன்), அம்லா, டுமினி, டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, ஷம்சி, நிகிடி.