தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்., 13 ஆம் தேதி தொடங்கியது. முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்றது.
INDvsSA 2nd T20:தென் ஆப்பிரிக்கா வெற்றி!! தொடர் சமநிலை 1-1
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. தனது பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்த போது மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் கை விடப்பட்டது.
இதனால், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வரும் 24 ஆம் தேதி கேப் டவுனில் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி நடைபெற உள்ளது.
4th T20I: Match washed out.
India lead series 2-1 with one match remaining #SAvIND— BCCI Women (@BCCIWomen) February 21, 2018
4th T20I: Rain stops play. SA 130/3 in 15.3 overs #SAvIND
— BCCI Women (@BCCIWomen) February 21, 2018