ஐபிஎல் 2017: இறுதிப்போட்டியின் மைதானம் பிசிசிஐ அறிவிப்பு

Last Updated : Apr 3, 2017, 10:35 AM IST
ஐபிஎல் 2017: இறுதிப்போட்டியின் மைதானம் பிசிசிஐ அறிவிப்பு title=

10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான மைதானத்தை பிசிசிஐ நேற்று உறுதி செய்தது.

இந்தியாவில், 10-வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற உள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் வரும் மே 1௪-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், இத்தொடரின் ப்ளே-ஆப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்களை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை முடிவாக அறிவித்தது.

ப்ளே-ஆப் சுற்றில் முதல் ஆட்டம் மே 16-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும். அடுத்த இரு ப்ளே-ஆப் போட்டிகள் மே 17 மற்றும் 19-ம் தேதிகளில் பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும். மே 21-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் இப்போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது என பிசிசிஐ தெவித்துள்ளது.

Trending News