Team India Asia Cup 2022: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடைபெறவுள்ள ஆசிய கோப்பை 2022க்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பல மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இளம் வீரர்கள் பலர் முதல் முறையாக ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். அதே நேரத்தில், அணித் தேர்வில் சில அதிர்ச்சிகரமான முடிவுகளும் காணப்படுகின்றன. இந்த அணியில், இளம் பேட்ஸ்மேனை இந்திய அணியின் தேர்வாளர்கள் சேர்க்கவில்லை. அவர் அணியில் இடம் கிடைக்காததால், அந்த வேதனையை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
இஷான் கிஷன்
ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் இடம் பெறவில்லை. இஷான் கிஷன் தொடர்ந்து சில காலம் டீம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும், அவருக்கு பிளேயிங் 11-ல் தொடர்ந்து இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஆசிய கோப்பை 2022-க்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | இந்தியா - ஜிம்பாப்வே மேட்ச்; இந்த டிவியில் இலவசமாக பாருங்கள்
அதிருப்தி என்ன?
ஆசிய கோப்பை 2022-ல், KL ராகுல் தொடக்க ஆட்டக்காரராக அணியில் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக இஷான் கிஷான் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்தி பாடலின் வரிகளை எழுதியுள்ளார். காயம் மற்றும் வலிகள் ஏற்பட்டாலும், முட்டாள் என நினைத்திருந்தாலும், உங்களை நீக்கியிருப்பார்கள். ஆனால் அவர்களைப் போல் நீங்கள் மறைந்துவிடாதீர்கள் என கூறியிருக்கிறார்.
ரெக்கார்டு
இஷான் கிஷன் இதுவரை டீம் இந்தியாவுக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 30.17 சராசரியில் 543 ரன்கள் எடுத்துள்ளார். 4 அரை சதங்களையும் அடித்துள்ளார். இஷான் கிஷான் பல சந்தர்ப்பங்களில் ரோஹித் சர்மாவுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார். கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பியிருப்பதால், இனி இஷான் கிஷனுக்கான வாய்ப்பு மிக மிக கடினமாக மாறிவிட்டது.
மேலும் படிக்க | தோனிக்கு இந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது - ஆர் ஸ்ரீதர் விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ