டோனி இல்லாதது எங்களுக்கு பெரும் பலம் -ரோகித் சர்மா கருத்து!

IPL 2019 தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டோனி விளையாடாதது தங்களக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்ததாக ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 27, 2019, 01:35 PM IST
டோனி இல்லாதது எங்களுக்கு பெரும் பலம் -ரோகித் சர்மா கருத்து!

IPL 2019 தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டோனி விளையாடாதது தங்களக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்ததாக ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்!

IPL 2019 தொடரின் 44-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி சுரேஷ் தலைமையில் செயல்பட அணித்தலைவர் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஏற்கனேவே ப்ளே ஆப் இடத்தை உறுதி செய்துவிட்ட சென்னை அணி டோனி இல்லாமல் மீண்டும் ஒரு பரிசோதனையை மேற்கொண்டது. சென்னை அணியின் பரிசோதனை மும்பை அணிக்கு சாதகமாய் அமைந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 67(48) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக இவின் லிவிஸ் 32(30) ரன்களும் குவித்தார்.

இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கயது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய சென்னை வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவுளியன் திரும்பினர். சென்னை அணி தரப்பில் முரளி விஜய் மட்டும் அதிகப்பட்சமாக 38(35) ரன்கள் குவித்தார். மும்பை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

போட்டியின் வெற்றியை அடுத்து மும்பை அணியின் வெற்றி குறித்து பேசிய அணித்தலைவர் ரோகித் சர்மா ப்போட்டியில் டோனி விளையாடாதது தங்களக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்ததாக கருத்து தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News