ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான நபர். ஒரு வீரராகவும், கேப்டனாகவும், அணியின் பயிற்சியாளராகவும் பல சாதனைகளை செய்துள்ளார். இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார் ராகுல் டிராவிட். இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்சிப் இறுதி போட்டியிலும், 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியிலும் தோல்வி அடைந்து ஐசிசி கோப்பைகளை கைவிட்டது. கடந்த மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியிலும் கோப்பை கைநழுவி சென்றது. இருப்பினும் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி கோப்பையை இந்திய அணி வென்றது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக ஒரு ஐசிசி கோப்பைகளை கூட வெல்லாமல் இருந்த இந்திய அணி, அந்த பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டது வந்துள்ளது.
மேலும் படிக்க | இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பெரும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா 125 கோடி பரிசு தொகையை டி20 உலக கோப்பையை வென்ற அணிக்கு அறிவித்தார். இதன் மூலம் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 5 கோடியும், ரிசர்வ் வீரர்களாக இருந்தவர்களுக்கு ரூ. 1 கோடியும், பயிற்சியாளர்களுக்கு ரூ. 2.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ. 5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே போ ஆகியோருக்கு தலா ரூ. 2.5 கோடி வழக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக் குழுவில் உள்ள 5 உறுப்பினர்களும் தலா ரூ. 1 கோடி கிடைக்கும். இந்நிலையில், ராகுல் டிராவிட் பிசிசிஐ கொடுத்துள்ள கூடுதல் ஊக்க தொகையை வாங்க மறுத்துள்ளார். மற்ற பயிற்சியாளர்களுக்கு கொடுத்த ரூ. 2.5 கோடி மட்டும் எனக்கு போதும் என்று தெரிவித்துள்ளார்.
I am pleased to announce prize money of INR 125 Crores for Team India for winning the ICC Men’s T20 World Cup 2024. The team has showcased exceptional talent, determination, and sportsmanship throughout the tournament. Congratulations to all the players, coaches, and support… pic.twitter.com/KINRLSexsD
— Jay Shah (@JayShah) June 30, 2024
இது தொடர்பாக பிசிசிஐயிடம் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளதாவது, “மற்ற துணை ஊழியர்களுக்கு (பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர்) கொடுக்கப்பட்டுள்ள ஊக்க தொகையை எனக்கு வழங்கினால் போதும். கூடுதலாக உள்ள ரூ. 2.5 கோடி எனக்கு வேண்டாம்,” என்று கூறியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் ட்ராவிட் இப்படி செய்வது முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2018 ஆம் ஆண்டு U-19 அணியின் பயிற்சியாளராக ட்ராவிட் இருந்த போது, அந்த அணி கோப்பையை வென்றது. அப்போது, டிராவிட்டிற்கு ரூ. 50 லட்சமும், துணைப் பணியாளர்களுக்கு ரூ. 20 லட்சமும், வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும் வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு வழங்கப்பட்ட கூடுதல் ஊக்க தொகையை வாங்க மறுத்து இருந்தார். இதன் மூலம் ட்ராவிட் பலரது இதயங்களையும் வென்றுள்ளார்.
மேலும் படிக்க | இந்தியாவை விட்டு வெளியேறிய விராட் கோலி? லண்டனில் செட்டில் ஆக முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ