பிசிசிஐ-யை நிர்வகிக்க புதிய உறுப்பினர்கள்- சுப்ரீம் கோர்ட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய நிர்வாகியின் பெயரை இன்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

Last Updated : Jan 30, 2017, 04:54 PM IST
பிசிசிஐ-யை நிர்வகிக்க புதிய உறுப்பினர்கள்- சுப்ரீம் கோர்ட் title=

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய நிர்வாகியின் பெயரை இன்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

பிசிசிஐ புதிய நிர்வாகிகளாக ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாய் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நியமனம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்த அனுராக் தாகூர் சுப்ரீம் கோர்ட் பதவிநீக்கம் செய்தது.

புதிதாக நிர்வாகிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் குழு அமைக்கப்பட்டது. அதன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட சிலர் 70 வயதை தாண்டி இருந்ததால் அதை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்.

இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர்களாக வினோத் ராய், ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமயே, பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயனா எதுல்ஜி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

Trending News