இந்திய அணியின் வீரர்கள் தற்போது ஐபிஎல் 2022 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் போட்டியின் பைனல் மே 29ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்கா அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் டெல்லி, ராஜ்கோட், பெங்களூரு போன்ற நகரங்களில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிகாவிற்கு எதிரான தொடரில் பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | வந்துவிட்டது பெண்களுக்கான ஐபிஎல் போட்டிகள்! அணி விவரம்!
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்காக வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தற்போது ஐபிஎல் 2022 போட்டிகள் குஜராத் அணியின் கேப்டனாக உள்ளார்.
கேப்டனாக இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல் பிளே ஆப்பிற்கு அழைத்து சென்றுள்ளார். மேலும், முன்பு இருந்ததை போல தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்து விளங்கி வருகிறார். ஷிகர் தவானும் நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அதிக அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அவரிடம் கேப்டன்சியை ஒப்படைக்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. ஜூன் 9ம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூன் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022க்குப் பிறகு இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR