கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Suryakumar Yadav: இந்திய அணியின் தற்போதைய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் 2025ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 25, 2024, 07:07 AM IST
  • மும்பையில் அணியில் உள்ள சூர்யகுமார் யாதவ்.
  • கொல்கத்தா அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்.
  • முக்கிய டீலிங் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்! title=

ஐபிஎல்லில் இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு அளித்துள்ளது. கேகேஆர் அணியில் இருந்து தான் ரின்கு சிங், ஷுப்மான் கில் போன்ற பேட்ஸ்மேன்கள் வந்தனர். இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் உருவாக்கி உள்ளது. மேலும் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் போன்ற சீனியர் வீரர்களையும் ஒவ்வொரு ஆண்டும் தக்க வைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2024 போட்டியில் கேகேஆர் அணி கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கம்பீர் தலைமையில் சிறப்பாக விளையாடியது.

மேலும் படிக்க | அழிந்து வரும் இனமாக மாறும் ஆப் ஸ்பின்னர்கள்! அஸ்வினுக்கு பிறகு யார்?

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர்களின் கேப்டனை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர பேட்டரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை தங்கள் அணிக்கு கொண்டு வர முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. என்னதான் ஐபிஎல் 2024ல் ஸ்ரேயாஸ் ஐயர் அணியை பெருமைப்படுத்தியிருந்தாலும், தற்போது கேப்டனை மாற்ற ஆலோசித்து வருகின்றனர். இதற்கு ஷ்ரேயாஸ் ஐயரின் சமீபத்திய பார்ம் முக்கிய காரணமாக இருக்கலாம். 2023 ஒருநாள் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஐயர் அதன் பிறகு பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஐபிஎல் 2024, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என தொடர்ந்து சொதப்பி வந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அவருக்கு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் பெரிதாக ரன்கள் அடிக்க தவறினார். எனவே ஷ்ரேயாஸ் ஐயரை டிரேடிங் கார்டாக வைத்துக்கொண்டு கேகேஆர் நிர்வாகம் மும்பை அணியுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. கடைசியாக 2020ம் ஆண்டு தான் மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன் பிறகு அவர்களால் வெல்ல முடியவில்லை. கடந்த சில சீசன்களாக மோசமாக விளையாடி வந்தது. இதனால் இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது அணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மும்பை அணி இந்த ஆண்டு கடைசி இடத்தை தான் பிடித்தது. 

தற்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால் மும்பை அணி அவரை மாற்றவும் திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் மும்பை அணியின் ஸ்டார் பிளேயர் ரோஹித் ஷர்மா அணியை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. சூர்யகுமார் யாதவ் 2014 முதல் 2017 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார். அதன் பிறகு தான் மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்து. எனவே சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு புதிதாக இருக்காது. மேலும் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி யாரை தக்கவைக்கும், யாரை வெளியேற்றும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News