மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட்: 123 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி

Last Updated : Jun 15, 2016, 04:19 PM IST
மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட்: 123 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி title=

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று இந்தியாவும் ஜிம்பாப்வேவும் மோதின. டேசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் முதலில் பேட் செய்து 123 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆகியுள்ளது. பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் ஒருநாள் போட்டியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்றது இந்தியா. ஏற்கனவே தொடரையும் கைப்பற்றி

இந்நிலையில் மூன்றாவது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் நடையை கட்டினர். இதனால், 43வது ஓவரில் 123 ரன்களில் ஜிம்பாப்வே ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் உசி சிபாண்டா அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார்.

தற்போது இந்திய அணியின் தனது பேட்டிங்கை தொடங்கியுள்ளது. இப்போட்டியில் தொடக்க வீரர் கருண் நாயர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் பேட்ஸ்மேன் பயாஸ் பசல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய ஒருநாள் அணிக்கு அவர் ஆடும் முதல் போட்டி இதுவாகும். ராகுலுடன், பசல் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினார்.

Trending News