எல்லா கிரிக்கெட் சாதனைகளை திருப்பி எழுதுவார் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வங்கதேச அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, ஐதராபாத்தில் நடக்கிறது. இதன் 2-வது நாளில் இந்திய கேப்டன் கோலி, தொடர்ந்து பிராட்மேன் டிராவிட் உள்ளிட்டோரின் சாதனைகளை தகர்த்தார். தவிர மேலும் பல சாதனைகளை தனக்கு சொந்தமாக்கினார்.
இதனால் தனது குருவாக சச்சினுக்கு கிட்டத்தட்ட நெருக்கமாக சாதனைகளை படைத்துவரும் கோலி, எல்லா கிரிக்கெட் சாதனைகளையும் தகர்ப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில்:-
பவுலர்களின் தன்னம்பிக்கையை விராட் கோலி துவக்கத்திலேயே தகர்ப்பது தான் அவரது பலமே. அவரைப்போல ஒரு திறமையான வீரர் கிடைத்தற்கு, இந்திய அணி தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. அவர் வேகமாக சச்சின், சேவக், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ள வருகிறார். என்றார்.