மகளிர் டி-20 உலக கோப்பை: நாளை காலை இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி

நாளை காலை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி மோதுகின்றன.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 22, 2018, 02:49 PM IST
மகளிர் டி-20 உலக கோப்பை: நாளை காலை இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி
Pic Courtesy : @WorldT20

6_வது மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியா கயானாவில் நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 நாட்டின் அணிகள் பங்கேற்றனர். இந்த அணிகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதில் "ஏ" பிரிவில் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா பங்களாதேஷ் அணிகளும், "பி" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் இடம்பெற்றன. 

இதில் "பி" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி அனைத்து லீக் போட்டியிலும் வென்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அதேபோல "ஏ" பிரிவில் முதலிடத்தில் மேற்கிந்திய தீவும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது.

இன்று நவம்பர் 22 ஆம் தேதி(இந்திய நேரப்படி நாளை) அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதியில் மேற்கிந்திய தீவும், ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றனர். இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றனர். 

 

முதல் அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 (வெள்ளிகிழமை) மணிக்கு நடைபெற உள்ளது. இரண்டாவது அரையிறுதி நாளை காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் இரு அணிகள் நவம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் இறுதிச்சுற்றில் மோத உள்ளன.