SL vs AUS: டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு

இன்றைய  20வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 15, 2019, 02:59 PM IST
SL vs AUS: டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு

14:49 15-06-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

 


லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 20வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும், இலங்கை அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் லண்டனனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும். 

இங்கிலாந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் மழை வரக்கூடாது என பிரார்த்தனை செய்கின்றன. 2019 உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக நான்கு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் மூன்று போட்டியில் டாஸ் கூட போட முடியவில்லை. மழையின் காரணமாக இலங்கை அணிக்கு தான் அதிக சேதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அணியின் இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தற்போது இதுகுறித்து பேசி ஒன்றும் ஆகபோவது இல்லை. இந்த விஷயங்களை இலங்கை அணி மறந்துவிட்டு, இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முழு சக்தியுடன் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில் கடந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன்களான ஆஸ்திரேலியா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் விளையாட முயற்சிக்கும்.

ஆஸ்திரேலியா இதுவரை ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து உள்ளது. ஆனால் இதற்கிடையில் இந்தியாவிடம் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது இலங்கையை எதிர்க்கொள்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஓவலில் மழைக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. எனவே மழை போட்டியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. மேகமூட்டமான சூழ்நிலைக்கான வாய்ப்பு உள்ளது. இது பேட்டிங்கிற்கான ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். 

இதுவரை இலங்கையில் நான்கு போட்டிகள் பங்கேற்றுள்ளது. அவற்றில் இரண்டு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக செயல்பட வில்லை என்றே கூறலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதன் மூலம், இலங்கை வீரர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்றைய போட்டி வாய்ப்பாக இருக்கும். ஸ்ரீ லங்கா அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் டிமுத் கருணாரட்ன மற்றும் குசால் பெரேரா இருவரை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பி வருது இலங்கை அணிக்கு கவலையாக உள்ளது, சிறப்பான ஆட்டத்தை இலங்கை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அனுபவ வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் ஆல்-ரவுண்டர் பெரேரா ஆகியோர் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டியிருக்கும்.

இரு அணிகளிலும் வெற்றி தோல்வியை பார்த்தால் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இரு அணிகளுக்கு இடையே விளையாடிய 96 ஒருநாள் போட்டிகளில் 60 ஆஸ்திரேலியா மற்றும் 32 இலங்கை வெற்றி பெற்றுள்ளன. 

உலகக் கோப்பையில், இரு அணிகளும் இதுவரை ஒன்பது தடவைகள் எதிர்கொண்டன, அவற்றில் ஏழு முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளன. ஒரே ஒரு போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது, அதுவும் 1996 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சாத்தியமானது.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கென் ரிச்சர்ட்சன், பாட் கம்மின்ஸ், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் கூல்டர் நைல், ஆடம் ஜாம்பா , நாதன் லியோன் 

இலங்கை: திமுத் கருணாரத்ன (கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, சுரங்கா லக்மல், லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், ஜீவன் மெண்டிஸ், குசெயில் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குஷால் பெரேரா (விக்கெட் கீப்பர்), துசாரி பெரேரா, நுவான் பிரதீப், சிவன் மல்யா, இசுரு உதநா, ஜெஃப்ரி வாண்டரா

More Stories

Trending News