திண்டிவனம்: திண்டிவனம் (Tindivanam) அருகே, வியாழக்கிழமை அன்று சாலையில் ஓரமாக இருந்த மரத்தில் ஒரு கார் மோதியதில் ஒரு பெரும் விபத்து (Car accident) ஏற்பட்டது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் ஒரு கார் ஓட்டுனர் கொல்லப்பட்டனர். இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திண்டிவனம் அருகிலுள்ள பதிரி கிராமத்தில் (Pathiri Village) வியாழனன்று அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் ஆறு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
காயமடைந்த இரண்டு குழந்தைகளும் ஒரே இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி இந்த விபத்தில் இறந்துவிட்டார். மேலும் 4 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகளும் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ALSO READ: சபாஷ் மீனா: மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி 85% மதிப்பெண் எடுத்து சாதனை!!
பதிரி கிராமத்திற்கு அருகில் கார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 5.15 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கார் ஓட்டுனர் கார் ஓட்டிக்கொண்டே தூங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என அதிகார வரம்பு போலீஸ் நிலைய காவல்துறை அதிகாரி ஒருவர் கண்ணால் கண்ட சாட்சி ஒருவரை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.
கார் மரத்தில் மோதியவுடன், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார், என்றார் காவல் துறை அதிகாரி.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்த குடும்பம், காஞ்சிபுரத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அங்கு அந்த குடும்பம் சொந்தத் தொழிலை நடத்தி வந்ததாகத் தெரிகிறது.
கார் ஓட்டுனர்கள் பணியில் இருக்கும்போது கவனக்குறைவு கண்டிப்பாகக் கூடாது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. ஓட்டுனர்களின் கவனம் சிறிது தப்பினால் கூட அது அவர்களின் உயிருக்கும் அவர்களை நம்பி வாகனத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிர்களுக்கும் ஆபத்தாக அமையலாம்.