உள்ளாட்சித் தேர்தல்: இவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

நான் கோட்சேவின் ஆதரவாளர் என வெளிப்படையாக பேசியவருக்கு பா.ஜ.க. சீட் வழங்கியிருப்பது ஏன் என ஒருதரப்பும், அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள மற்றொரு தரப்பினரும் இணையத்தில் விவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். 

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 7, 2022, 05:11 PM IST
உள்ளாட்சித் தேர்தல்: இவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் title=

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாகுபதிவின் தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்திக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இருவரும் தனித்தனியாக தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். ஆனாலும் கூட்டணி தொடரும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: Tamil Nadu Local Body Elections 2022: பேச்சுவார்த்தை தோல்வி - பாஜக தனித்து போட்டி

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சென்னை மாநகராட்சியின்134ஆவது வார்டில் களம் இறங்கும் உமா ஆனந்தன் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த இவர், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், "கோட்சே காந்தியை சுட்டது அவரது நியாயம். அவர் ஒரு இந்து. அதனால்தான் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் கோட்சே ஆதரவாளர் என்பதில் பெருமைப்படுகிறேன்" என்று பேசியிருந்தார். இதனை சுட்டிக்காட்டியுள்ள இணையவாசிகள், கோட்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவருக்கு சீட்டா என கொந்தளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: 'இப்படி இருந்தால் எப்படி தாமரை மலரும்?': அண்ணா நினைவு நாள் விழாவில் டி.ராஜேந்தர்

நான் கோட்சேவின் ஆதரவாளர் என வெளிப்படையாக பேசியவருக்கு பா.ஜ.க. சீட் வழங்கியிருப்பது ஏன் என ஒருதரப்பும், அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள மற்றொரு தரப்பினரும் இணையத்தில் விவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். இவர்களை போன்றவர்கள் அதிகாரத்திற்கு வருவது அபாயகரமானது என்றும் கண்டனக் குரல்கள் எழுகின்றன.

அதேநேரத்தில் தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் சி.டி.நிர்மல்குமார், தனது சமூக வலைத்தளத்தில், "சென்னை 134 வார்ட் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் ஆலயம் மீட்பு, லஞ்சம்/ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் என தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவையில் யாருக்கும் அடிபணியாது நேர்மையாக வாழ்ந்தவர்" என அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். 

 

இதையும் படியுங்கள்: "கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" பாஜகவை கிண்டல் செய்த எம்பி மஹுவா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News