CBI Gold Missing Case: ஓய்வுபெற்ற தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் CBI விசாரணை

CBI காவலில் இருந்து தங்கம் காணாமல் போன வழக்கை விசாரிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழக குற்றப்பிரிவு-சிஐடி போலீசாருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2020, 10:43 AM IST
  • CBI காவலில் காணாமல் போன தங்க வழக்கில் புதிய திருப்பம்.
  • தமிழக காவல்துறையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் CBI விசாரணை.
  • இதை, வழக்கு விவரங்களை புரிந்து கொள்வதற்கான ஒரு பயிற்சியாக பார்க்கிறது CBI.
CBI Gold Missing Case: ஓய்வுபெற்ற தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் CBI விசாரணை title=

சென்னை: தமிழகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) காவலில் இருந்து 104 கிலோ தங்கம் காணாமல் போனது தொடர்பான உள் விசாரணையின் ஒரு பகுதியாக, CBI வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுடன் விசாரணை நடத்தியது. அந்த அதிகாரி முதலில் CBI-யில் பணிபுரிந்து பின்னர், மாநில காவல் துறையின் போலீஸ் இயக்குநர் ஜெனரலாக (ADGP) ஓய்வு பெற்றார்.

CBI -யில் இணை இயக்குநர் பொறுப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் அந்த அதிகாரி பணியாற்றியுள்ளார். மத்திய நிறுவனமான CBI-யில் பணியாற்றிய பின்னர் மாநில காவல்துறையிலிருந்து டிஜிபி-யாக ஓய்வு பெற்ற மற்றொரு தமிழக கேடர் அதிகாரியையும் CBI விசாரணைக்கு அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரானா கார்ப்பரேஷன் தங்க வழக்கை CBI கையாண்டபோது இந்த இரண்டு அதிகாரிகளும் வெவ்வேறு நேரங்களில் மேற்பார்வை கேடர் பதவியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் இந்தியாவிற்கான CBI-யின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பதவிகளில் இந்த இரு அதிகாரிகளும் இருந்தனர். ஆகையால், ஓய்வுபெற்ற தமிழக காவல் துறை (Tamil Nadu Police) அதிகாரிகளுடனான விசாரணையை, CBI, இந்த வழக்கு விவரங்களை புரிந்து கொள்வதற்கான ஒரு பயிற்சியாக பார்க்கிறது.

ALSO READ: CBI பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் ‘missing’: 45 கோடி ரூபாய் தங்கம் எங்கே போனது?

CBI காவலில் இருந்து தங்கம் காணாமல் போன வழக்கை விசாரிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (Madras High Court) தமிழக குற்றப்பிரிவு-சிஐடி போலீசாருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டது.

காணாமல் போன 400.47 கிலோ பொன் மற்றும் ஆபரணங்களை CBI 2012 ல் சென்னையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றியது. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் இந்த நிறுவனத்திற்கு கனிம மற்றும் மெட்டல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் (MMTC) அதிகாரிகள் வழங்கியதாகக் கூறப்படும் சலுகைகள் பற்றிய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சூரனா கார்ப்பரேஷனின் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சாவி CBI வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் CBI நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சுரானா கார்ப்பரேஷனின் லிக்விடேட்டரிடம் ஒப்படைக்க தங்கத்தை எடைபோட்ட போது, 103.864 கிலோ தங்கம் காணாமல் போனது பற்றி தெரிய வந்ததாக CBI கூறியது.

ALSO READ: TN CBI Gold missing case: ‘CBI-க்கு கொம்பு முளைத்திருக்கிறதா?’ Madras High Court காட்டம்!!

முன்னதாக, CBI வழக்குகளுக்கான சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், தங்கம் வைக்கப்பட்ட லாக்கர்களின் 72 சாவிகளை ஒப்படைத்ததாக CBI கூறியது. தங்கம் கைப்பற்றப்பட்ட போது, ​​தங்கக் கம்பிகள் அனைத்தையும் ஒன்றாக எடைபோட்டதாக சிபிஐ கூறியது.

ஆனால் சூரானாவுக்கும் SBI-க்கும் இடையிலான கடன்களைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட லிக்விடேட்டரிடம் ஒப்படைக்கும்போது, ​​அவை தனித்தனியாக எடைபோடப்பட்டன. அதுவே முரண்பாட்டிற்கு காரணம் என்றும் CBI கூறியது.

CBI-யின் இந்த கூற்றை ஏற்க மறுத்த நீதிபதி பிரகாஷ், எஸ்.பி. தரவரிசையில் உள்ள ஒரு சிபி-சிஐடி (CB-CID) அதிகாரி, இந்த வழக்கு விசாரணையை எடுத்து நடத்தி, ஆறு மாதங்களில் இதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News