இந்தி பேசாத மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!
நாடு முழுவதும் ஒரே மொழி என்ற அடிப்படையில் இந்தி மொழியை வளர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகள் எழுந்தது.
இந்நிலையில் வரும் 20.09.2019 அன்று இந்தி மொழி தினிப்புக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 18, 2019
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது.
தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.
இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.