குடியரசுத் தலைவருக்கு அழைப்பில்லை
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார். இதில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ், அவர் தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க முழு தகுதி படைத்தவர் என்றும் கூறியது. அவருக்கு அழைப்பு விடுக்காமல் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பது என்பது ஜனநாயகத்துக்கான ஆபத்து என்றும் குற்றம்சாட்டியது. இருப்பினும் மத்திய பாஜக இதனை புறகணித்து திறப்பு விழாவை நடத்தியுள்ளது.
மேலும் படிக்க | ஐடி ரெய்டு அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது ஏன்...? - செந்தில் பாலாஜி கேள்வி
பாஜவின் போலி வேடம்
பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே அலங்கார பதவிகளை கொடுத்து பாஜக போலி வேடம் போடுவதாக தெரிவித்திருக்கும் காங்கிரஸ், அது மீண்டுமொரு முறை இப்போது அம்பலப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளது. பழங்குடியின மக்களின் பிரதிநிதியாக இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பாஜக அழைக்காதது ஏன்? என்றும் சரமாரி கேள்விகளை முன்வைத்திருக்கும் நிலையில், மேட்டுப்பாளையத்தில் அக்கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் போராட்டம்
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி.எஸ்டி துறை சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பழங்குடி சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காத பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து மத்திய பாஜக அரசு எஸ்சி எஸ்டி சமூகத்தை புறக்கணித்து வருவதாகவும், இதனால் எஸ்சி எஸ்டி சமுதாயத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும் ஒப்பாரி வைத்தனர். மேலும், காந்தி திருவுருவ சிலையிடம் இது குறித்து கோரிக்கை மனு அளித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் படிக்க | முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ரெய்டு இது-ஆர்.எஸ் பாரதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ