கோடை விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். கடந்த கல்வி ஆண்டில் ஏப்ரல் 29ம் தேதி தேர்வு முடிந்த பின் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடும் வெயில் காரணமாக ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு, பின்பு மீண்டும் ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் இன்று செயல்பட தொடங்கியது.
மேலும் படிக்க | வரப்பில் டிம்பர் மரங்கள்... வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்...வளம் தரும் விவசாயம்!
கல்வியாண்டு தொடங்கிய இன்றைய தினம் சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றார். மாணவர்களுக்கு மலர் கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் வரவேற்ற அமைச்சர், பள்ளி வகுப்பறை, ஆய்வகங்களை பார்வையிட்டு, விலையில்லா பாடப்புத்தகம் சீருடை உள்ளிட்டவற்றை மாணவிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முழுவதும் இன்று 8,340 நடுநிலை பள்ளிகள், 3,547 உயர்நிலை பள்ளிகள் 4,221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16, 108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 46,22,324 மாணவர்கள் வர உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்த அமைச்சர், பள்ளி வகுப்பறைகளில் முறையாக பள்ளி மாணவர்களின் நலனுக்கு தேவையானதை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், முதலாம் வகுப்புக்கு 1,31,000 மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளதாகவும், முதல் முறையாக பள்ளி தொடங்கிய நாளே பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜூலை மாத இறுதிக்குள் முழு சீருடையும் வழங்கப்படும் என்றும், இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி சீருடை பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாமென தெரிவித்தார்.
இலவச மடிக்கணினி திட்டம் கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக வழங்கப்படாத குறித்து கேள்விக்கு நிதி நிலைமை சரியானதும், மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாநில கொள்கை குழுவில் புதிதாக இரண்டு நபர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால், அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை சமர்ப்பணம் செய்த பின் அடுத்த ஆண்டு நடைமுறைபடுத்த முடியுமா என்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறினார். வரும் 15ம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உடற்கல்வித்துறைக்கு தனியாக பாடம் வைப்பது குறித்து ஆலோசுக்கப்படுமென தெரிவித்தார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் நபர்களுக்கு போட்டி தேர்வு இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நீக்குவதா இல்லையா என்பது குறித்து புதிய கல்வி கொள்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு தெரியவரும் என்று தெரிவித்த அமைச்சர், தற்போது வரை 11ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, என தெரிவித்தார்.
மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ