DMK Government Latest News: தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கான ஆலோசனையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுக்குறித்து பார்ப்போம். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை என்றாலே பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதற்காக தான் பண்டிகை நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து வருகிறது.
மேலும் படிக்க - கட்டாயப்படுத்தி உடலுறவு! திருமணம் செய்ய மறுத்த இளைஞர்! சிறையில் அடைப்பு!
தீபாவளி பண்டிகை
பொங்கல் பண்டிகையை அடுத்து, தமிழகம் முழுவதும் அதிகமானோர் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளியையொட்டி நகரங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
தீபாவளி பண்டிகை விடுமுறை
தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் மட்டும் தான் விடுமுறை என்பதாலா, சொந்த ஊருக்கு சென்றவர்கள் அடுத்த நாள் உடனடியாக சென்னை திரும்புவது என்பது பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்?
இதனால் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். ஒருவேளை வெள்ளிக்கிழமை அன்று பொதுவிடுமுறை அளித்தால், மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
- அக்டோபர் 31 - தீபாவளி விடுமுறை
- நவம்பர் 1 - பொது விடுமுறை (இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை)
- நவம்பர் 2 - சனிக்கிழமை,
- நவம்பர் 3 - ஞாயிற்றுக்கிழமை
வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை?
வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு அலுவலர் மத்திய மாநில தலைவர் அமிர்தகுமார் தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இத தொடர்பாக ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், "தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வருகிற 31 ஆம் தேதி அரசு விடுமுறையை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தீபாவளி மறுநாள் நவம்பர் 1 ஆம் தேதி வேலை நாளாக உள்ளது. அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் (நவம்பர் 2 மற்றும் நவம்பர் 3) சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ளது. எனவே நவம்பர் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் அரசு பொதுவிடுமுறை அறிவித்தால், நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதன்மூலம் தீபாவளி பண்டிகை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் தங்கியிருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும். மறுபுறம் பண்டிகை முடிந்து பணிபுரியும் இடத்திற்கு மீண்டும் செல்ல பஸ் வசதியும் எளிதாக கிடைக்கும். எனவே நவம்பர் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசு ஆலோசனை
இதனையடுத்து நவம்பர் 1 (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - தமிழ்நாட்டு மக்களே அக்டோபர் 26 சிலிண்டர் கிடைக்காது, கொஞ்சம் உஷாரா இருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ