அரசு பேருந்துகள் இனி சைவ ஹோட்டல்களில் மட்டுமே நிற்கும்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியீடு  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 25, 2022, 07:50 AM IST
அரசு பேருந்துகள் இனி சைவ ஹோட்டல்களில் மட்டுமே நிற்கும்! title=

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.  அரசுப் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில், 

- உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும், மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.

- கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்

மேலும் படிக்க | மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு முடிவு!

- உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்

- பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.

- உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்

- பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்

- உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.  

- மேலும் உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் M.R.P., விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்

- உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்

- உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்

- உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

மேலும் படிக்க | மேகதாது விவகாரத்தில் தோற்றால் வருங்காலம் நம்மை சபிக்கும்..உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News