Tamil Nadu: கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஜக -வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். தேர்தல் சமயத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார் சம்மன் அனுப்பி வந்தனர்.
நேற்று சம்மனை பெற்றுக் கொண்ட மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி அலுவலகத்தில் தனக்கு பத்து நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்காக கடிதமும் எழுதி கொடுத்திருந்தார்.
ஆனால் இன்று காலை 9 மணி அளவில் சென்னை கோவை சேர்ந்த சிபிசிஐடி அதிகாரிகள் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கேட்ட அனைத்து விசாரணைக்கும் தான் தகுந்த பதில் கொடுத்திருப்பதாகவும் 9 மணியிலிருந்து 11 மணி வரை விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து எஸ்.ஆர்.சேகர் பேசும்போது தற்போதுள்ள தமிழக அரசின் பழிவாங்கும் முயற்சியாகவும் பாஜகவிற்கு களங்கத்தை ஏற்பட்டும் முயற்சியாகவும் காவல்துறையை ஏவி விட்டுள்ளதாக தெரிவித்தார்.
தனக்கும் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட விசாரணைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக கூறியுள்ளதாக செய்தியாளர்களிடையே அவர் கூறினார்.
மேலும் படிக்க | விருதுநகருக்கு அருகில் உள்ள எழில் கொஞ்சும் சாயல்குடி கடற்கரை...மிஸ் பண்ணாதீங்க!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ