மக்களின் தாகம் தணித்திடும் அறப்பணிகளில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் மாவட்ட செயலாளர்கள் இன்று முதல் தண்ணீர் பந்தல்களை அமைத்திட வேண்டும் எனவும் உத்தரவை பிறப்பித்து இருந்தார். கோடை காலம் வாட்டி எடுத்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே செல்ல சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். கொதிக்கும் தார் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படும் பொது மக்களுக்கு சற்று கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க தண்ணீர் பந்தல் அமைத்து உதவிட அதிமுக தலைமையிலிருந்து உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில், சென்னை திருவெற்றியூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.குப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மற்றும் வடசென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோகர் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மேலும் சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம் வெளியே, பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக, தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருவொற்றியூர் கே. குப்பன் ஏற்பாட்டில், குடிநீர், மோர், குளிர்பானங்கள், நுங்கு, வெள்ளரிக்காய், இளநீர், மாதுளம், பழம், தர்பூசணி கிர்ணி பழம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் வெயிலின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள தொடர்ந்து நாள் முழுவதும் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து வெயில் நேரத்தில் உதவிய அதிமுகவினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட தண்ணீர் பந்தலை உடனே அகற்ற வேண்டும் என அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மக்களுக்கு செய்யும் நல்லதை தடுபதால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ