மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Last Updated : Apr 28, 2018, 10:44 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்! title=

மதுரை: மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் சுந்தரேஸ்வரரும் - மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சிக்கு பாட்டாபிஷேகம் கடந்த 25-ம் தேதியும், திக்விஜய நிகழ்ச்சி 26-ம் தேதியும் நடைபெற்றது.மதுரையில் சித்திரை திருவிழாவந்து 12 நாட்கள் நடைபெறும். சித்திரை திருவிழாவின் 10-ம் நாள் சுமங்கலி பெண்களுக்கான பிரசித்திபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் நாள். 

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக துவங்கியுள்ளது. கீழ மாசி வீதியிலிருந்து கிளம்பிய புறப்பட்ட தேர் மாசி வீதிகள் வழியாக அசைந்தாடி சென்று கொண்டிருக்கிறது. இதில் தமிழகம் தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தினை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று மாலை அழகர்மலைக் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை நடைபெறும்....! 

Trending News