MGR கழக தலைவர் RM வீரப்பன் அவர்களுடன் MK ஸ்டாலின் சந்திப்பு!

MGR கழகத்தின் தலைவர் RM வீரப்பன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2018, 02:28 PM IST
MGR கழக தலைவர் RM வீரப்பன் அவர்களுடன் MK ஸ்டாலின் சந்திப்பு! title=

MGR கழகத்தின் தலைவர் RM வீரப்பன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்!

முன்னாள் அமைச்சரும், MGR கழகத் தலைவருமான RM வீரப்பன் அவர்கள் இன்று தனது 93-வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடுகின்றார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை வீரப்பன் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

RM வீரப்பன் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை 6 மணியளவில்  தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் RM வீரப்பன் பிறந்தநாள் விழா MGR கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. 

இவ்விழாவிற்கு நீதிபதி எஸ்.மோகன் தலைமை வகிக்கிறார். திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தொழிலதிபர் பழனி பெரியசாமி, எம்.ஜி. ஆர். கழக மகளிர் அணி செயலாளர் அபிராமி உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

Trending News