புகழேந்தி: ரூ.8000 கோடி முறைகேடு செய்த எடப்பாடி மற்றும் வேலுமணியை கைது செய்ய வேண்டும்

மத்திய, மாநில அரசு நிதிகளில் 8000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி கோருகிறார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2021, 08:58 PM IST
  • அரசு நிதியி ரூ.8000 கோடி முறைகேடு
  • எடப்பாடி மற்றும் வேலுமணியை கைது செய்க
  • அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோரிக்கை
புகழேந்தி: ரூ.8000 கோடி முறைகேடு செய்த எடப்பாடி மற்றும் வேலுமணியை கைது செய்ய வேண்டும் title=

சேலம்: மத்திய, மாநில அரசு நிதிகளில் 8000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி கோருகிறார்

தேர்தல் நேரத்தில்  எடப்பாடி பழனிச்சாமி மக்கள் மத்தியில் பேசிய பொய்யான பேச்சை வைத்தே அவரை, தமிழக அரசு  கைது செய்ய முடியும்   என்றும், இந்த விவகாரத்தில்  உயர்நீதிமன்றமே தன்னிச்சையாக முன்வந்து  எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும்  எனவும் புகழேந்தி  தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் அவர் கூறும்போது,  எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் பேசிய பேச்சு,  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருவதாகவும்,  குறிப்பாக சென்னை மாநகரை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி செலவிட்டு தண்ணீர் நிற்காமல் சீரமைத்து உள்ளதாக பேசியுள்ளார்.  இது முற்றிலும் பொய்யான தகவல்.  

தற்போது சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கிறது.  கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை, சென்னை வெள்ளக்காடாக மாறி இருக்கிறது . தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்பொழுது சென்னை மாநகரை சீரமைத்து விட்டதாகவும்,  இனி எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது என்றும் பொய்யாக பேசினார். அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.  கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மத்திய, மாநில அரசு நிதி என 8000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துள்ளனர்.  

Also Read | கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து; விரைவில் இந்தியாவில் அறிமுகம்

இதில் மத்திய அரசு நிதி 6 ஆயிரத்து 744 கோடியும், ஸ்மார்ட்  திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடியும்,  மாநில பட்ஜெட்டில் 500 கோடியும்  என 8000 கோடி ரூபாய்க்கு மேல் சென்னை மாநகரத்திற்காக  மட்டும் செலவிட்டதாக கூறி  கொள்ளையடித்துள்ளனர். கிழிந்த போன சூ -வுக்கு(shoe) பாலீஸ் போட்டதைப் போல , தெருக்களுக்கு பல்பை மாட்டி , சிமெண்ட் பூசி மோசடி செய்துள்ளனர். ஆனால்  எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் பேசும்போது, சென்னை நகரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைத்து விட்டதாகவும்,  இனி எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரே  நிற்காது எனவும்  எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சின்  வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது . இதுவே பெரிய ஆதாரம்.  எனவே இதை வைத்தே எடப்பாடி பழனிச்சாமியை  தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றார். 

தொடர்ந்து பேசிய புகழேந்தி, உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக இந்த வழக்கை எடுத்து, திட்டத்திற்காக  ஒதுக்கிய பணம் என்ன ஆனது?  என்னென்ன பணிகள் நடைபெற்றது என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி  மற்றும் தவறு செய்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும் என்று  புகழேந்தி வேண்டுகோள் விடுத்தார். மக்கள் வரிப்பணத்தை ஏமாற்றி ,  ஏழைகளின் வயிற்றில் அடித்து ,  பணத்தை கொள்ளையடித்த   எடப்பாடி பழனிச்சாமியால், அதிமுக  தொண்டர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளனர் . எனவே அவர் தலைமையில் அதிமுக  கட்சி அழிந்து வருகிறது. இதற்கு 

ஓ  பன்னீர்செல்வமும்  முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற புகழேந்தி, இனி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றார். தொடர்ந்து கொடநாடு விசாரணை தொடர்பான செய்தியாளர்களின்  கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, நான் ஏற்கனவே கூறியது போல  அந்த சமயத்தில் கொடநாடு எஸ்டேட்டில் மின்சாரத்தை துண்டிக்க அவசியமென்ன?,  ஏன் கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை நடத்தவில்லை  என்ற இந்த இரண்டு விவகாரமே எடப்பாடி பழனிச்சாமி மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தற்போது கைதாகியுள்ள ஓட்டுனர்  கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் அப்ரூவராக மாறி,  அவர்கள்  அளிக்கும் ரகசிய வாக்கு மூலத்தின்  மூலம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கொள்ளை கும்பல்  சிக்குவார்கள்  என உறுதிபட தெரிவித்தார்.

Also Read | மழை வெள்ளத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 பேரை மீட்டது NDRF

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News