முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், போட்டியிடுகின்றனர். மேலும் தினகரன், ஜே.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் நடிகர் விஷாலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மதுசூதனனின் தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு மைத்ரேயன் எம்.பி. சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக வெற்றி பெற எங்கள் வாக்கு வங்கியே போதுமானது. பாஜக ஒரு பொருட்டே கிடையாது. இவ்வாறு கூறியிருந்தார்.
இதற்க்கு சுட்டிக் காட்டி எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கூறுகையில்,
ஆன்னா ஊன்னா டெல்லிக்கு காவடி தூக்குற அதிமுக ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க தேவையில்லை. இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சு அதிகம். ஜோதி பிரகாசமா எரியுது. சீக்கிரமே pic.twitter.com/DamldqgslB
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 3, 2017
என்று குறிப்பிட்டுள்ளார்.