என் மணைவியை மீட்டு தாருங்கள்... பெண்ணின் கதறலுக்கு அதிரடி பதிலளித்த நீதிமன்றம்

தன்பாலின உறவில் இருந்ததால், குடும்பத்தால் கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு தர கோரிய பெண்ணுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 29, 2022, 08:28 PM IST
  • ஓரின சேர்க்கை தம்பதியை பிரித்த பெற்றோர்.
  • மனைவியை மீட்டு தரவேண்டி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பெண்.
என் மணைவியை மீட்டு தாருங்கள்... பெண்ணின் கதறலுக்கு அதிரடி பதிலளித்த நீதிமன்றம்  title=

விருதுநகரைச் சேர்ந்த  பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். 

அதில், "எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். 

இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு,  அப்பெண்ணை கடத்திச் சென்றுவிட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அப்பெண்ணின் சகோதரர் தன்பாலின உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். என்னையும் மிரட்டினார். 

மேலும் படிக்க | ராகவா லாரன்ஸ் பாதையில் விஜய் சேதுபதி! கை கொடுக்குமா திகில்

இதுதொடர்பாக வத்தலகுண்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், தற்போது வரை வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. அப்பெண்ணின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஆகவே பெண்ணை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். ஆகவே அவரது விருப்பப்படி  செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

மேலும் படிக்க | பிக்பாஸ் அனிதா சம்பத் வாங்கியுள்ள புதிய பிரம்மாண்ட வீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News