Tamil Nadu Weather: இன்னும் இரண்டு நாளைக்கு வறண்ட வானிலை.. கடும் வெயில் எச்சரிக்கை!

Tamil Nadu Weather In April: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 18, 2023, 01:27 PM IST
  • வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து அதிகமாக இருக்கக்கூடும்.
  • மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை.
Tamil Nadu Weather: இன்னும் இரண்டு நாளைக்கு வறண்ட வானிலை.. கடும் வெயில் எச்சரிக்கை! title=

Tamil Nadu Weather Updates: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, 20.04.2023 அன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதேபோல 21.04.2023 மற்றும் 22.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:
18.04.2023 மற்றும் 19.04.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

மேலும் படிக்க: மூன்றரை லட்சம் செலவு செய்து கருத்தரிக்கவில்லை - மருத்துவமனை முற்றுகை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

>> கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை.

>> மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.

>> மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.

மேலும் படிக்க: அதிமுக நெருப்பு..டச் பண்ணாதீங்க அண்ணாமலை - கடுகடுத்த ஜெயக்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News