வரம்பு மீறிய தெற்கு ரயில்வே - இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவு

ரயில் பயணத்தின்போது உரிய இருக்கை ஒதுக்காமல், பயணிகளிடம் வரம்பு மீறி பேசிய குற்றச்சாட்டில் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேவுக்கு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 11, 2022, 08:48 PM IST
  • மன உளைச்சலை ஏற்படுத்திய தெற்கு ரயில்வே
  • இழப்பீடு தொகை வழங்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவு
வரம்பு மீறிய தெற்கு ரயில்வே - இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவு title=

கோவையில் நீதித்துறை அலுவலராக பணியாற்றும் சந்திரசேகரன் என்பவர் மாநில நுகர்வோர் ஆணையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் இருந்து சென்னைக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றேன். அதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கு திரும்பியபோது பெற்றோருடன் பயணித்தேன். 

கோவையில் இருந்து சென்னை வரும்போது குளிர்சாதன பெட்டியில் முன்பதிவு செய்யபட்டிருந்த நிலையில், இருவருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டது. மற்ற இருவருக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது தன்னையும், மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானேன்.

Southern Railway

இதேபோன்று சென்னையில் இருந்து கோவைக்கு திரும்பியபோது இருக்கை ஒதுக்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் மூத்த குடிமக்களான என் பெற்றோர் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல் குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தன்னைப்போல 70க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | சமாதி நிலையில் நித்யானந்தா உயிரிழப்பு? - சிலைக்கு பூஜை செய்யும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு

ரயில்வே நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கு மற்றும் டிக்கெட் பரிசோதகரின் தரக்குறைவான நடத்தையால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனவே நஷ்ட ஈடாக 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | திமுகவின் ஊழலை பற்றி கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் ஊழலை பேசாதது ஏன்? - சீமான் கேள்வி

இந்த மனுவை விசாரித்த  மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் ஆர்.சுப்பையா மற்றும் உறுப்பினர் வெங்கடேச பெருமாள் அகியோர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக   50 ஆயிரம் ரூபாய் வழங்கவும், வழக்கு செலவுத் தொகையக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும் தெற்கு ரயிவேக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஆம்புலன்ஸ்க்கு 108 என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா? - தமிழிசையின் பதிலால் ஆடிப்போன தொண்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News