சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ், சுந்தர், துரை சந்திரசேகர், சுதர்சனம், வரலட்சுமி மதுசூதனன் மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறையில் மாணவர்களின் நலன் குறித்தும், மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களில் தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய மண்டலங்களில் ஆய்வுக் கூட்டம் முடிவடைந்த நிலையில் சென்னை மண்டலத்தில் இன்று நடைபெற்றது.
மேலும் படிக்க | விஞ்ஞான ஊழலெல்லாம் திமுகவுக்கு கை வந்த கலை - ஜெயக்குமார் விமர்சனம்
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியரை அழைத்து கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தினார். மாணவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உடற்கல்வி நேரத்தை தவிர்க்காமல் விளையாட வைக்கப்படுகிறார்களா என கண்காணிக்க வேண்டும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை பேச வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள பள்ளிகள் மாநகராட்சியோடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளி கட்டமைப்பை சீரமைக்க 400 கோடி ஒதுக்கி மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் படிக்க | பிரதமரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்காதீங்க - வானதி சீனிவாசன்
மேலும், மாணவர்கள் தற்கொலை அதிகம் தனியார் பள்ளி மாணவர்கள் தான் ஈடுபடுகிறார்கள் அதிக அழுத்தம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வைத்து, பள்ளியை பேனர் வைத்து விளம்பர படுத்துவதால் ஏற்படுவதாக கூறினார். பள்ளி மாணவர்களிடம் திடீரென சென்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் சென்று பேசுங்கள் அதை வைத்து கலந்தாலோசிக்க அறிவுறுத்தினார். மாணவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வலியுறுத்தினார். அதிக ஆய்வுகளை பள்ளிகளில் மேற்கொள்ளுங்கள் என பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ