தமிழக சட்டமன்றத் தேர்தல் (TN Assembly Elections) இந்த மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. கடும் பாதுகாப்புக்கு இடையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், சென்னை வேளச்சேரியில் உள்ள, எண் 92வது வாக்குச்சாவடியில் இருந்து, இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரத்தை மாநகராட்சி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்ல முயன்றனர். அவர்களை பொதுமக்கள் மடக்கிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முதலில், அந்த இயந்திரங்கள் பழுதடைந்திருந்தன என்றும், அதனால்தான் அவை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் ஊழியர்களின் தரப்பில் கூறப்பட்டது. எனினும், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அந்த இயந்திரங்களில் 15 வாக்குகள் (Voting) பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
ALSO READ | தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து, இந்த (Velachery) வாக்குச்சாவடியில், மறுவாக்குப்பதிவு (Re-Polling) நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இது குறித்து ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் ஏப்ரல் 17 ஆம் தேதி வேளச்சேரி பகுதியில் மறுவாக்குப்பதிவு நடக்கும் என தெரிவித்திருந்தது. அதன்படி, பலத்த பாதுகாப்புக்கு இடையில், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில் கடந்த வாக்குப்பதிவின் போது 220 பேர் வாக்களித்திருந்த நிலையில், மறுவாக்குப்பதிவில் 186 பேர் வாக்களித்துள்ளனர். தற்போது வாக்குப்பதிவுக்கு பின், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR