தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை ஒதுக்கீடு

தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 9, 2021, 01:54 PM IST
  • தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை ஒதுக்கீடு
  • 2021-22-ஆம் ஆண்டு நிதியாண்டின் அடிப்படை மானியத்தின் முதல் தவணைத் தொகை இது
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகள் கோவிட்- 19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த தொகையை பயன்படுத்தலாம்
தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை ஒதுக்கீடு title=

சென்னை: தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 25 மாநில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 8,923.8 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை (Basic Untied Grants)  நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. 

இதில், தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
2021-22-ஆம் ஆண்டு நிதியாண்டின் அடிப்படை மானியத்தின் முதல் தவணைத் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.   

Also Read | முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'..  மத்திய அரசின் 'ரியாக்ஷன்'

பொதுவாக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு நிதியாண்டின் அடிப்படை மானியத்தின் முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவிக்கப்படும். 

ஆனால், தற்போது கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக முன்கூட்டியே இந்த தவணைத் தொகை விடுவிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது. இந்தத் தொகையை நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை வழங்குகிறது. 

நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் கோவிட்- 19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளுக்கு இந்த தொகையை பயன்படுத்தலாம்.

Also Read | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PMK தலைவர் டாக்டர் ராமதாஸிடம் தொலைபேசியில் வாழ்த்து 

நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும்  ஊரக அமைப்புகளின்  அமைப்புகளின் அனைத்து அடுக்குகளும் இந்த மானியத் தொகையை பயன்படுத்தி கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் என்பதால் கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நிதி ஒதுக்கீட்டில் உத்தர பிரதேசத்திற்கு அதிகபட்சமாக 1441.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவுக்கு 861.4 கோடி, பீகாருக்கு ரூ.741.8 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.  
 
நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தில் 50 சதவீதம் அடிப்படை மானியமாகவும் 50 சதவீதம் இணைப்பு மானியமாகவும் வழங்குகிறது.

Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தீவிரம் 

உள்ளாட்சி அமைப்புகள்  சம்பளம் மற்றும் இதர செலவுகள் தவிர  குறிப்பிட்ட இடங்களில் செய்யவேண்டிய தேவைகளுக்கு அடிப்படை மானியத்தைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு மானியத்தை துப்புரவு மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பயன்படுத்தலாம். அதோடு, குடிநீர் விநியோகம், மழைநீர் சேமிப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.   

Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News