வரும் திங்கள்கிழமை சுகாதார நிபுணர்களுடன் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்திய பின்னர் மாநிலம் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “ஜூன் 29 அன்று சென்னையில் சுகாதார நிபுணர்களுடன் ஒரு சந்திப்பு நடத்துகிறோம். அவர்களின் பரிந்துரைகளைக் கேட்டு, மத்திய அரசிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்ற பிறகு, முழுமையான ஊரடங்கு குறித்து முடிவு செய்வோம்.” என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்
READ | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?
COVID தடுப்பு நடவடிக்கைகள், தொழில்துறை முன்னேற்றங்கள் மற்றும் PWD நடந்துகொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து திருச்சி கலெக்டரேட்டில் தொடர்ச்சியான மறுஆய்வுக் கூட்டங்களை நடத்திய முதல்வர், ஊரடங்கு தொடர்பான முடிவினையும் அறிவித்துள்ளார்.
இதன்போது அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது., “நாங்கள் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகம், ICMR மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செயல்படுகிறோம். அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி அரசியல் கட்சிகளைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மருந்து கிடைத்தால்தான் COVID-னை வெல்ல முடியும், தொற்றுநோயை எப்போது கட்டுப்படுத்த முடியும் என்பதை எங்களால் நிர்ணயிக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.
வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது., "உலகெங்கிலும் COVID இறப்பு எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. வளர்ந்த நாடுகள் கூட வைரஸின் பிடியில் தவித்து வருகின்றன. இருப்பினும், இறப்புக்களைத் தடுக்க தமிழக அரசாங்கம் மிகுந்த முயற்சிகளை எடுத்துள்ளது மற்றும் கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது" என்று முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.
READ | ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...
பின்னர், முக்கோம்புவில் கொல்லிடம் முழுவதும் நடந்து வரும் தடுப்பணை கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்த அவர், தற்போது ஊரடங்கில் தவித்து வரும் தமிழக அரசு கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கடந்த இரண்டு மாதங்களில், மாநில அரசு ரூ.35,000 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. சராசரியாக, அரசு ஒரு மாதத்தில் ரூ.14, 000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு சந்தித்துள்ளது. நிலைமை தொடர்ந்தால், இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.87, 000 கோடியாக இருக்கும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.