சென்னை: தமிழகத்தில் சென்னை (Chennai Lockdown) உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்தநிலையில், சென்னை காவல் ஆணையர் திரு. விஸ்வநாதன் (AK Viswanathan) அவர்கள், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, சென்னையின் பிரதான சாலைகள் மூடப்படும். போலி இ-பாஸ் (E-pass) மூலமாகவோ அல்லது உரிய காரணங்களின்றி வெளியே செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
> முழு ஊரடங்கு மிக கடுமையாக கடைபிடிக்கப்படும்.
> சென்னையின் பிரதான சாலைகள் மூடப்படும்.
> காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது
> அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்.
> உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
> போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை
> கடந்த ஊரடங்குகளின் போது பெறப்பட்ட இ-பாஸ்கள் பயன்படுத்தக்கூடாது.
> இந்தமுறை புதிதாக இ-பாஸ் பெற வேண்டும்.
> சென்னை சாலைகளில் வழக்கமான போக்குவரத்திற்கு அனுமதியில்லை.
> முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செய்தியும் படிக்கவும் | சென்னை பூட்டுதல் விதிமுறையில் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!
> அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்கள் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
> பொது முடக்கத்தை கண்காணிக்க சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
> சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காண்காணிக்கப்படும்.
> சென்னையில் இதுவரை 788 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் (Chennai News) பொது முடக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், சுகாதார செயலருக்கு கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியும் படிக்கவும் | சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு
முன்னதாக, தமிழகத்தில் (Tamil Nadu COVID-19 Cases) விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, நாளை முதல் 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.