ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு ஐகோர்ட் வக்கீல்கள்...

கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இருவர், தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

Last Updated : Apr 19, 2020, 02:25 PM IST
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு ஐகோர்ட் வக்கீல்கள்... title=

நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 507 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர். முதல்வர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி என நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின் ஊரடங்கு நிவாரண நிதிக்கு பல வக்கீல்களும் நன்கொடை அளித்தனர். நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் ரூ.2.5 லட்சம் நன்கொடை வழங்கி தொடங்கி வைத்தார். இதற்கிடையில் இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர். ஆனாலும், பார் கவுன்சில் சார்பாக ஒரு ரூபாய் நன்கொடை அளித்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

 

Trending News