தமிழக கலாச்சாரத்தில் திருமணம் என்பது இரு மனங்கள் மட்டுமின்றி, இரு குடும்பங்கள் இணையும் நிகழ்வாக உள்ளது. அதனால், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பெற்றோர்கள் செய்வார்கள். திருமணம் என்ற ஒரு சுப நிகழ்வு நடப்பதற்கு ஆயிரத்தெட்டு காரணிகளை அலசி ஆராயும் பெற்றோர்கள், ஆண் - பெண் இருவருக்கும் பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள்.
ஒரு இடத்துக்கு பல இடங்களில் உள்ள பிரபலமான ஜோசியர்களிடம் ஜாதகங்களைக் காட்டி பொருத்தம் பார்ப்பார்கள். இப்போதும் அது நடைமுறையில் இருந்தாலும், ஆன்லைன் பொருத்தம் பார்ப்பது என்பதும் பிரபலமாகிவிட்டது. ஜாதகக்காரர்களே சிலர் ஆன்லைன் செயலிகளையும், இணைதளங்களையும் வைத்துக் கொண்டுதான் பொருத்தம் பார்க்கின்றனர். அதனால் எந்தெந்த இணையதளங்கள் மூலம் திருமண பொருத்தம் பார்க்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஜோசியம் சொல்லும் டாப் செயலிகள் 2022
கூகுள் தளத்துக்கு நீங்கள் சென்று ‘திருமண பொருத்தம்’ என டைப் செய்தால் நிறைய தளங்கள் வரும். அவற்றில் யூசர்களின் பெரும்பாலானோரின் நம்பிக்கை பெற்ற தளம் ‘prokerala.com மற்றும் Tamilsurangam.in. இந்த தளங்களில் எளிமையாக உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமண பொருத்தம் பார்த்துவிடலாம். எந்தெந்த பொருத்தம் இருக்க வேண்டும், எவையெல்லாம் இருந்தால் திருமணம் செய்யலாம் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உங்களுக்கு உடனே தெரிவித்துவிடும்.
இவைதவிர பொருத்தம் குறித்தும் இருவருக்கும் இடையே எந்தவகையில் ஒத்துப்போகும், எவையெல்லாம் சரியாக இருக்காது என்பது உள்ளிட்ட தகவல்களும் உங்களுக்கு கிடைத்துவிடும். ஜாதகம் குறித்து இதுவரை நீங்கள் அறியாத தகவல்களைகூட நீங்கள் இந்த தளங்களில் அறிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் உங்களின் மகள் மற்றும் மகனின் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை சரியாக கொடுக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை நீங்கள் சரிபார்த்து கொடுத்தால், திருமண பொருத்தம் நொடியில் தெரிந்துவிடும். இதன்மூலம் ஜோசியக்காரர்களுக்கு செலவழிக்கும் கணிசனமான தொகைகூட உங்களுக்கு மிச்சமாகும்.
மேலும் படிக்க | YouTube Update: யூடியூப் நிறுவனம் வைக்கப்போகும் செக் - இனி கஷ்டம்தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR